நண்பர்களே கவனமாக இருங்கள்- இந்நோய் இரக்கமற்றது - சுரேஷ் காமாட்சி.
கொத்துக் கொத்தாக மரணம் மக்களை அழைத்துப் போய்க் கொண்டிருக்கிறது நண்பர்களே கவனமாக இருங்கள் இரக்கமற்றது இந்நோய் என தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
கொத்துக் கொத்தாக மரணம் மக்களை அழைத்துப் போய்க் கொண்டிருக்கிறது. அரசு, அதிகாரம் இரண்டும் ஒரு பக்கம் கட்டுப்பாடுகளை விதித்துப் பார்க்கிறது. ஆனாலும் கொரானாவின் சவால் சமாளிக்க முடியாததாக உள்ளது.உறவினர்கள், குழந்தைகள், வயதானவர்கள் என யாரை இழக்கிறோம் என்பதே தெரியவில்லை. காரணம் சுயக் கட்டுப்பாடு இல்லாததுதான்.
மாஸ்க் போடுன்னா போடுறதில்லை. போட்டாலும், மூக்குக்கு போடறதில்லை. வாய்க்குப் போடறது. வெளியே வராதீங்கன்னா ரோடு ரோடா சுத்தறது.
கொரானா என்ன காதலியா? வெளியே போய் பார்க்காம இருக்க முடியாதா??இவ்வளவு நடந்தும் எந்த கட்டுப்பாடுமின்றிதானே இருக்கிறோம்? காவல்துறையினரும், மருத்துவங்களும் எவ்வளவுதான் பாடுபார்ப்பார்கள்?? அவர்களும் மனிதர்கள்தானே??
ஆக்சிஜன் இல்லாமல், படுக்கை இல்லாமல், மருந்து இல்லாமல், வைத்தியம் பண்ணக் காசு இல்லாமல் எத்தனை மனிதர்கள் கொரானா தாக்கி படாத பாடு படுகின்றனர்?? அதைப் பார்த்தும் திருந்த முடியலையா??
நீங்களும் போய் அவதிப்படணுமா? நீங்க அவதிப்படுவதுமில்லாமல் மற்றவர்களையும் அவதிக்குள்ளாக்கி... இப்படி வெளியே சுற்றிய மனிதர்களால் 3000 காவலர்கள் கொரானா பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் குடும்பத்துப் பிள்ளைகளும் மனிதர்கள்தானே?? அவர்களும் தங்கள் குடும்பத்தில் ஒரு மனிதன் நோயுறும் அவஸ்தையை அனுபவிக்கத்தானே செய்வார்கள்??
தயவுசெய்து மக்களே... சோத்துக்கு தேவையானதை வாங்கி வைத்துக் கொண்டு ஒரு வாரம் வெளியே வராம இருங்களேன்...உங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டதாய் நினைத்து வெளியே வராமல் இருங்கள்.
நாம் மீள வேண்டாமா? பசியும் பட்டினியும் நம்மை சாகடிக்க வரும் தூரம் ரொம்ப தொலைவிலில்லை. இன்னும் இரண்டு லாக்டவுண் விழுந்தால் பஞ்சம்தான். புரிந்துகொள்ளுங்கள். நாம் சீக்கிரம் உழைக்க வெளியே செல்ல வேண்டுமானால், கொரானா நம்மை விட்டுச் செல்ல வேண்டும். அது இல்லையென்ற நிலையை வெகு விரைவில் உருவாக்க வேண்டும்.
நண்பர்களே கவனமாக இருங்கள். இந்நோய் இரக்கமற்றது. ஆட்கொண்டுவிட்டால் உயிர் பறிக்கிறது.மாஸ்க் போடுங்கள். வெளியே வராதீர்கள்.
பிழைத்துக் கிடந்தால், எதையும் சாதிக்கலாம்.அவ்வளவுதான் என திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருமான சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார்.
-✍️சுரேஷ் காமாட்சி
தயாரிப்பாளர்/ இயக்குநர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu