ரெம்டெசிவர் மருந்து - நேரு ஸ்டேடியம் யாரும் வரவேண்டாம் .

ரெம்டெசிவர் மருந்து - நேரு ஸ்டேடியம் யாரும் வரவேண்டாம் .
X

ரெம்டெசிவிர் மருந்து (மாதிரி படம்) 

தனியார் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு.

தமிழக முதலமைச்சர் உத்தரவு படி இன்று முதல் நேரு ஸ்டேடியத்தில் ரெம்டெசிவர் வழங்கப்பட மாட்டாது என சென்னை ருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

தமிழக முதலமைச்சர் உத்தரவு படி இன்று முதல் ரெம்டெசிவர் மருந்துகளை தனியார் மருத்துவமனைகளில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் மருந்துகள் வழங்கப்படுவது இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.பொதுமக்கள் யாரும் மருந்துகள் பெற வர வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது,

தமிழக முதலமைச்சர் தலைமையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் ஆகியோர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டத்தில் நோயாளிகளின் உறவினர்கள் மருந்துகள் பெற சிரமப்படுவதை போக்கவேண்டும் என கேட்டுக்கொண்டதையடுத்து கொரோனா தொற்றுநோயாளிகளுக்கு அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளியே ரெம்டெசிவர் மருந்துகள் 18 ஆம் தேதி (இன்று) முதல் கிடைக்க தமிழக அரசால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ரெம்டெசிவர் மருந்துகள் தேவைப்படுவோர் சிகிச்சை பெற்று வரும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 15ஆம் தேதி முதல் நேரு ஸ்டேடியத்தில் வழங்கப்பட்டு வந்த ரெம்டெசிவர் மருந்துகள் நேற்று முதல் நிறுத்தப்பட்டது.எனவே பொதுமக்கள் யாரும் நேரில் ஸ்டேடியத்திற்கு ரெம்டெசிவர் மருந்துகளை வாங்க வர வேண்டாம் என சென்னை பெருநகர காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.




Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!