சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் மூத்ததலைவர்,முன்னாள் எம்.பி - மறைவு.

சுதந்திர போராட்ட வீரர், காங்கிரஸ் மூத்த தலைவர், முன்னாள் எம்.பி, தஞ்சாவூர் மாவட்டம் பூண்டி புஷ்பம் கல்லூரி தாளாளர் துளசியய்யா வாண்டையார் (95) உடல் நலக்குறைவால் சென்னை சாலிகிராமத்தில் இன்று அதிகாலை காலமானார்.
சுமார் 50 ஆண்டுகளாக, புகழ் பெற்ற பூண்டி புஷ்பம் கல்லூரியின் தாளாளர். டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள குடும்பங்களின் முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கியவர்
இவர். பெருந்தலைவர் காமராஜர், மூதறிஞர் ராஜாஜி, முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களோடு நெருங்கிப் பழகியவர் ஆவார். துளசியய்யா வாண்டையார் மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக டெல்டா பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதுபெரும் காங்கிரஸ் தலைவரும், தீவிர காந்திய பற்றாளரும், டெல்டா மாவட்டங்களில் ஆயிரமாயிரம் ஏழை- எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் வாழ்வில் கல்வி ஒளியேற்றி வைத்த கல்வி வள்ளலுமான பெரியவர் திரு.கே.துளசி அய்யா வாண்டையார் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்..
பழம்பெருமையும்,பாரம்பரிய சிறப்பும் மிக்க குடும்பத்தின் வழித்தோன்றலாக இருந்தாலும் 'நான் ஒரு விவசாயி' என்று சொல்வதில் எப்போதும் பெருமிதம் கொண்டவர். 'ஒரு மனிதனுக்கு எளிமை, நேர்மை, ஆளுமை ஆகிய மூன்றும் இருக்க வேண்டும்' என்று வலியுறுத்திய .துளசி அய்யா.
அன்னாரது மறைவால் வாடும் அன்புக்குரிய.டி.கிருஷ்ணசாமி வாண்டையார் அவர்களுக்கும், குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன் என டிடிவி தினகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu