தமிழகம் முழுவதும் இன்றுமுதல் - இ-பதிவு கட்டாயம்.

தமிழகம் முழுவதும் இன்றுமுதல் - இ-பதிவு கட்டாயம்.
X
பதிவு செய்வது எப்படி?

தமிழகம் முழுவதும் இன்று முதல் மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய இ-பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இ- பதிவு முறை, 'சாப்ட்வேர்' மூலம் இயங்குவதால், விபரங்களை பதிவு செய்தவுடன், உடனுக்குடன் ரசீது வரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதனால் நெருங்கிய உறவினர்களின் இறப்பு போன்ற, அவசர தேவைக்காக பயணிப்போர், உடனுக்குடன் விண்ணப்பித்து பதிவு பெறலாம்.

பதிவு செய்வது எப்படி?

இ - பதிவு முறைக்காக உருவாக்கப்பட்டுள்ள, eregister.tnega.org என்ற இணையதளத்தில் மொபைல் எண்ணை பதிவு செய்து, மொபைல் போன் எண்ணுக்கு வரும், 'ஓ.டி.பி.,'யை பதிவு செய்ய வேண்டும்.

பின்னர் வரும் விண்ணப்பத்தில் பயண விபரங்கள், அடையாள அட்டை (ஆதார், ஓட்டுனர் உரிமம்) ஏதாவது ஒன்று, மற்றும் பயணத்திற்கான ஆவணங்கள், வாகனத்தின் எண் போன்றவற்றை, பதிவு செய்ய வேண்டும். அனைத்து விபரங்களையும் பதிவு செய்தவுடன், அளித்த தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, உடனுக்குடன் ரசீது வழங்கப்படும்.

ரசீதில், வாகனத்தின் எண், பயணி பெயர், பயணத்திற்கான காரணம், இடம் உள்ளிட்ட தகவல் இருக்கும். இதை பி.டி.எப்., வடிவில் பதிவிறக்கம் செய்து கொண்டு, பயணம் மேற்கொள்ளும்போது போலீசாரிடம் காண்பிக்க வேண்டும்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!