கொரோனா தொற்று - கட்டுப்படுத்த ஆலோசனை குழு...
முதல்வர் மு.க.ஸ்டாலின்
கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஆலோசனை வழங்க எம்எல்ஏக்கள் ஆலோசனை குழு அமைப்பு
தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவாமல் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக தமிழக முதலமைச்சர் தலைமையில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம்13 ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்றாக நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்த ஆலோசனைகளை வழங்க சட்டமன்ற கட்சிகளைச் சார்ந்த உறுப்பினர்களைக் கொண்ட ஒரு ஆலோசனைக் குழு அமைக்கலாம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தின் அடிப்படையில் அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு அவர்களிடமிருந்து பெறப்பட்ட பரிந்துரையின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில் பின்வரும் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஆலோசனைக் குழு அமைக்கப்படுகிறது
13 கட்சிகளின் சார்பில் தலா ஒரு எம்எல்ஏ நியமனம் திமுக - எழிலன், அதிமுக - சி.விஜயபாஸ்கர், பாஜக - நயினார் நாகேந்திரன், பாமக - ஜி.கே.மணி, காங்கிரஸ் ஏ.எம் முனிரத்தினம்
இந்த ஆலோசனை குழு கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது குறித்து அவ்வப்போது கூடி ஆலோசிக்கும் என தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu