ஒட்டனேந்தல் தமிழகத்தில் தானே இருக்குது - கமல்ஹாசன் கேள்வி.
தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா? என கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ளது ஒட்டனந்தல் கிராமம். இந்த வில்லேஜில் கடந்த 12 ஆம் தேதி தாழ்த்தப்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், மாரியம்மன் கோவில் திருவிழா ஒன்றை நடத்தியுள்ளனர். இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் ஊர் மக்களை அழைத்து அங்கு கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கிகளை எல்லாம் எடுத்து சென்றுள்ளனர். அதன் பின்னர் காவல் நிலையத்தில் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு பொருட்களை மீட்டு வந்துவிட்டார்கள்.
இந்நிலையில் தங்களை மீறி திருவிழா நடத்தியதாக கூறி ஒரு குறிப்பிட்ட சமூக மக்களை அழைத்து வரச் சொல்லி அவர்களை காலில் விழுந்து ஊர் மக்கள் மத்தியில் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறி இருக்கிறார்கள். அதன்படியே அந்த கிராமத்தில் வசிக்கும் அந்த பகுதியைச் சேர்ந்த திருமால், சந்தானம், ஆறுமுகம் ஆகியோர் ஊர்மக்கள் முன்னிலையில் காலில் விழுந்து வணங்கி இருக்காங்க.
இது இணையத்துல வலம் வந்ததையடுத்து, ஆட்சியர் மற்றும் காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்து 2 பேரை கைது செய்தார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் தனது டிவிட்டர் பக்கத்தில்,
இந்தியர் யாவரும் என் உடன்பிறந்தோர் என்று உறுதிமொழி எடுக்கும், குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம் என்று மனப்பாடப் பாட்டு கற்பிக்கும் தமிழகத்துக்குள்தான் விழுப்புரம் ஒட்டனேந்தல் இருக்கிறதா?
திருவிழா கொண்டாடியதற்காக சக மனிதரைக் காலில் விழவைக்கும் கலாச்சாரம் அருவருக்க வைக்கவில்லையா? இம்முறையே இறுதி முறையாக இருக்கட்டும். அரசின் தலையீடு வலுவானதாக அமையட்டும். என டிவிட்டியுள்ளார். ஞாயம்தானேங்க..
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu