அரசு போக்குவரத்து கழகம் - அதிரடி ஆஃபர் தெரியுமா?

அரசு போக்குவரத்து கழகம் - அதிரடி ஆஃபர் தெரியுமா?
X
ஆனா ஒரு கிலோ மீட்டருக்கு 40 ரூபாயாம் - அம்மாயோவ்!

திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்போவதாக அரசு போக்குவரத்து கழகம்அறிவித்துள்ளது.

கொரோனா நோய்த் தொற்றைத் தடுப்பதற்காக, தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதனால், அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் சேவைகள் முற்றிலும் முடங்கியுள்ளன. இருப்பினும், திருமணம், இறப்பு, மருத்துவப் பணிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளுக்கு உரிய அனுமதியுடன் தமிழகம் முழுவதும் அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் நூற்றுக்கணக்கான பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கி வருகிறோம். ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.40 என்ற கட்டண அடிப்படையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது ஊருக்கு ஏற்றார் போல், இடத்துக்கு ஏற்றார் போல் மாறும்.

பேருந்துகள் தேவைப்பட்டால், சென்னை மாநகர போக்குவரத்து கழகம் 9445030523, அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், 9445014416, விழுப்புரம் - 9445021206, கோவை - 9442268635, கும்பகோணம் - 9487995529 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!