முழுஊரடங்கு - அதுக்கு பொருந்தும், இதுக்கு பொருந்தாது.

முழுஊரடங்கு - அதுக்கு பொருந்தும், இதுக்கு பொருந்தாது.
X
நேற்றும், இன்றும், நாளையும்,

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டோக்கன் பெற்றவர்கள் நிவாரணத் தொகை பெற நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா நிவாரணத் தொகையாக ரூபாய் இரண்டாயிரம் பெற டோக்கன்கள் பெற்றுக் கொண்ட குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் நாளை காலை 8 மணி முதல் 12 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என தமிழக அரசு செய்திக் குறிப்பு தெரிவித்துள்ளது

இது இது குறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் இந்த மாதம் 16 மற்றும் 23 ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் ஏற்கனவே 16 அன்று முதல் தவணை நிவாரணத்தொகை 2000 வழங்குவதற்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு உள்ளது. எனவே குடும்ப அட்டைதாரர்களின் நலன் கருதி 16 ஆம் தேதி அன்று நிவாரண உதவித்தொகை பெறுவதற்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் மட்டும் நிவாரணத்தொகையை காலை 8 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை பெற்றுக் கொள்ளலாம் என அரசு செய்திக்ளுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும் நியாயவிலை கடைகளில் நிவாரணத் தொகை வழங்கப்படும் பொழுது முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது




Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!