கொரோனா நிவாரண நிதி - ஆளுநர் வழங்கிய ஒரு கோடி.

கொரோனா நிவாரண நிதி - ஆளுநர் வழங்கிய ஒரு கோடி.
X
தமிழக அரசு கொரோனா பரவாலைக் கட்டுப்படுத்த பலவித நடவடிக்கைகள்.

சென்னை ராஜ்பவனில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒரு கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் ஸ்டாலிடம் வழங்கினார்

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தமிழகம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் மக்களை பாடாய் படுத்தி வருகிறது. பல மாநிலங்களில் தொற்று புதிய உச்சங்களைத் தொட்டு வருகின்றது. தமிழகத்திலும் ஒரு நாள் தொற்றின் அளவு தினமும் அதிகரித்துக்கொண்டு தான் இருக்கிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு கொரோனா பரவாலைக் கட்டுப்படுத்த பலவித நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ராஜ்பவனில் ஆளுநர் மாளிகையில், ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்தார். கொரோனா பரவலைத் தடுக்கும் வழிமுறைகள் மற்றும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், கொரோனா நிவாரண நிதிக்காக ஆளுநர் கோடி ரூபாய்க்கான காசோலையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கினார். இந்த சந்திப்பின் போது அமைச்சர் துரைமுருகன், தலைமைச்செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர்.


Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!