வானதி சீனிவாசன் தம்பி யுவராஜ் கொரோனாவால் மரணம்

வானதி சீனிவாசன் தம்பி யுவராஜ் கொரோனாவால் மரணம்
பாஜக மகளிரணி தேசியச் செயலாளர் வானதி சீனிவாசன் எம்எல்ஏவின் தம்பி யுவராஜ் கொரோனாவால் மரணம்

எனதன்பு தம்பி கொரானாவால் உலகை விட்டு பிரிந்தான்..வானதி சீனிவாசன் துக்கம்

கோவை தெற்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக வானதி சீனிவாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து வானதி சீனிவாசன் நேற்று சட்டமன்ற பேரவையில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

ஒரு பக்கம் வானதி சீனிவாசன் பதவி பிரமாணம் செய்துகொண்டுள்ள மகிழ்ச்சியான தருணத்தில் மறுபக்கம் அவருக்கு துக்க செய்தியும் வெளிவந்துள்ளது.இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், என் தன்பு தம்பி யுவராஜ் இன்று கொரானாவால் இவ்வுலகை விட்டு பிரிந்தான். "எம் அக்கா" என்ற வார்த்தைக்கு உயிர் கொடுத்தவன், என் நிழலாக வாழ்ந்தவன், எனக்கு தீராத துக்கமாக மாறினான்…ஓம்சாந்தி. என்று வருத்தத்துடன் தெரிவித்திருக்கிறார்.

"யுவராஜின் மரணம் அதிர்ச்சியளிக்கிறது என்று வானதி சீனிவாசனின் பதிவை ரீட்வீட் செய்து தனது ஆழ்ந்த இரங்கலை கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story