தேர்தல் ஆணையத்தின் தபால் ஓட்டு வசதி சரியானதுதான்-உயர் நீதிமன்றம்

தேர்தல் ஆணையத்தின் தபால் ஓட்டு வசதி சரியானதுதான்-உயர் நீதிமன்றம்
X

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் 60(சி) பிரிவையும், 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், இணை நோய் உள்ளவர்கள், கொவிட் 19-ஆல் பாதிக்கப்பட்டவர்கள்/ தொற்று பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்துக்கு உள்ளானோர் மற்றும் அத்தியாவசியப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் உட்பட வாக்குச் சாவடிக்கு வராத வாக்காளர்களுக்கான தபால் ஓட்டு வசதி தொடர்பான விதிகளையும், எதிர்த்து தொடரப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் 2021 மார்ச் 17ம் தேதி தள்ளுபடி செய்தது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

56. வாக்குச்சாவடிக்கு செல்ல முடியாத சில பிரிவினருக்கு விலக்கு அளித்து, அவர்களும் ஜனநாயக திருவிழாவான தேர்தலில் ஒருங்கிணைந்து பங்கேற்க, தபால் ஓட்டை பயன்படுத்த தேர்தல் ஆணையம் செய்துள்ள அனைத்தையும் ஒப்புக் கொள்ள வேண்டும். வாக்குச் சீட்டின் ரகசியத்தையும், நியாயமான தேர்தல்கள் நடத்துவதையும் பாராட்ட வேண்டும் என்று எஸ். ரக்பிகர் சிங் கில் தீர்ப்பில் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

வாக்குச்சீட்டின் இரகசியத்தையோ அல்லது தேர்தல்களை நடத்துவதில் உள்ள நியாயத்தையோ சமரசம் செய்யாமல், இந்த செயல்முறை அனைத்தையும் உள்ளடக்கியதாக மாற்றினால், அது, அதை நடத்தும் அமைப்பான தேர்தல் ஆணையத்தைக் கொண்டாடுவதற்கும் பாராட்டுவதற்கும் ஒரு பெரிய காரணியாக இருக்கும் என்று ஒருவர் பணிவுடன் கூறலாம்.

1961ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகளின்படி, தபால் ஓட்டு அளிக்க அனுமதிக்கப்பட்ட நபர்களின் வகைப்பாட்டில், எந்த விதிமுறைமீறலையும் இந்த நீதிமன்றம் கண்டறியவில்லை எனக் கூறப்பட்டுள்ளது.

60. அதேபோல், 1961 ஆம் ஆண்டின் விதிமுறைகள்படி, தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க அனுமதிக்கப்பட்ட நபர்களின் வகைப்பாட்டில் எந்தவிதமான விதிமுறைமீறலும் இருப்பதாகத் தெரியவில்லை. வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிக்க முடியாதவர்களுக்கு இந்த வசதி செய்யப்பட்டது போல் தெரிகிறது.

-அவ்வாறு இருந்தால், 2019 மற்றும் 2020ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட திருத்தங்களால் அனுமதிக்கப்பட்ட பிரிவினரில் எந்த விதிமுறை மீறலோ இல்லை. குறிப்பாக, அந்த பிரிவினருக்கு ஜனநாயக செயல்பாட்டில் பங்கேற்க அவர்களுக்கான அடிப்படை உரிமையையை வழங்குவதே நோக்கம் எனத் தெரிகிறது.

தேர்தல்களை நடத்துவதற்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவது, தேர்தல் ஆணையத்தின் முழுமையான அதிகாரங்களுக்குள் உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது:

62. இறுதியாக, அரசியலமைப்பின் 324வது பிரிவின் மூலம் தேர்தல் ஆணையத்துக்கு முழுமையான அதிகாரம் வழங்கப்பட்டள்ளதால், தேர்தல் ஆணையத்திற்கு வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கான அதிகாரம் இல்லை என்ற மனுதாரரின் வாதம், நிராகரிக்கப்பட வேண்டும். மேலும், நாடாளுமன்ற விதியோ, சட்டமன்ற விதிமுறையோ இல்லாதபோது, தேர்தல்களை நடத்துவதற்கு எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது என ஏ.சி.ஜோஷ் தீர்ப்பில் உள்ளது.

தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளில் எந்தவித பிரிவும் இல்லாதபோது, 324 பிரிவின் கீழ் வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி, சட்டத்துக்கு உதவும் வகையில், கண்காணிப்பு, வழிகாட்டுதல் மற்றும் காட்டுப்பாடு விஷயத்தில் இது போன்ற அதிகாரத்தைக் காண முடிந்தது. மேலும் தேர்தலை நடத்துவதற்கான எந்த உத்தரவையும் பிறப்பிக்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை நீதிமன்ற தீர்ப்பு அங்கீகரித்துள்ளது.

2019ம் ஆண்டு ஜார்கண்ட் தேர்தலில் இருந்தே, சில பிரிவினருக்கு தபால் ஓட்டு முறையை தேர்தல் ஆணையம் தொடங்கியது. 2020ம் ஆண்டு நடத்தப்பட்ட பிகார் பொது தேர்தல்களிலும், தபால் ஓட்டு வசதி, இந்த அனைத்து பிரிவினருக்கும் நீட்டிக்கப்பட்டது. இதில் 52,000-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களித்தனர். எந்த வாக்காளரும் விடுபடாமல், அனைவரும் உள்ளடங்கிய தேர்தலை நடத்தும் நோக்கத்தில் நடைபெறும் தேர்தல்களிலும், இடைத்தேர்தல்களிலும், தபால் ஓட்டுகளுக்கான விரிவான வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் ஏற்கனவே வழங்கியுள்ளது''.

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஆகியோரும் வாக்குச்சாவடிக்கு சென்று, வாக்களிக்கத் தேவையான வசதிகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது என்பதைக் குறிப்பிடுவது பொருத்தமானது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் வாக்குச்சாவடிக்கு செல்ல இலவச போக்குவரத்து வசதியும் தற்போது வழங்கப்பட்டுள்ளது.

Tags

Next Story