/* */

பெயர் குறிப்பிடா காசோலைகள் சுங்கத்துறை பறக்கும் படையினரால் பறிமுதல்

பெயர் குறிப்பிடா காசோலைகள் சுங்கத்துறை பறக்கும் படையினரால் பறிமுதல்
X

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் மேற்கு வங்கம் போன்ற தேர்தல்கள் நடக்கவிருக்கும் மாநிலங்களில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பதற்காக சோதனை நடவடிக்கைகளை மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் மேற்கொண்டு வருகிறது.

இதன் படி, கடத்தல் சரக்குகள் மற்றும் போதை பொருட்கள் உள்ளிட்டவற்றின் நடமாட்டத்தை தடுப்பதற்காக பறக்கும் படைகள், நிலை கண்காணிப்பு படைகள், கடல் ரோந்து குழு மற்றும் சாலை ரோந்து குழு ஆகியவற்றை சுங்கத்துறையின் சென்னை மண்டலம் அமைத்துள்ளது.

2021 மார்ச் 12 வெள்ளியன்று நள்ளிரவில், சரக்கு வாகனம் ஒன்று சென்னை கடற்கரை ரயில் நிலையம் அருகே சென்னை சுங்கத்துறையின் பறக்கும் படையால் தடுத்து நிறுத்தப்பட்டு, சோதனையிடப்பட்ட போது, ரூ 4,39,430 பணம் மற்றும் ரூ 66,000 மதிப்புடைய பெயர் குறிப்பிடாத காசோலைகள் இரண்டு ஆகியவை ஓட்டுநர் கேபினில் இருந்து கைப்பற்றப்பட்டன.

இவற்றுக்கான தகுந்த ஆவணங்களை ஓட்டுநரால் தர இயலாத நிலையில், பணம் மற்றும் காசோலைகள் சுங்க அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டன.மேற்கண்ட தகவல்களை செய்திக் குறிப்பு ஒன்றில் சுங்கக் கடத்தல் தடுப்பு பிரிவின் உதவி ஆணையர் டாக்டர் ஆர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Updated On: 16 March 2021 2:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு