அதிமுக கூட்டணியில் இருந்து விலகியது தேமுதிக
அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் "2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் தொடர்ந்து மூன்று கட்டங்களாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.இதில் தேமுதிக சார்பில் கேட்கப்பட்ட தொகுதி எண்ணிக்கையையும், தொகுதிகளையும் ஒதுக்க மறுத்து உடன்பாடு ஏற்படாத காரணத்தினால், மாவட்ட கழக செயலாளர்களுடனான அவசர ஆலோசனை கூட்டத்தில் ஏற்பட்ட கருத்தின் அடிப்படையில், அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறதுஎனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி என அக்கட்சியின் துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய தேமுதிக துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், "அதிமுக - பாஜக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகுகிறது. கேட்ட தொகுதிகள் கிடைக்காததால் தலைவர் விஜயகாந்த் இதை அறிவித்துள்ளார்.தேமுதிகவுக்கு இன்றுதான் தீபாவளி. தமிழகத்தில் அனைத்து இடத்திலும் அதிமுக டெபாசிட் இழக்கும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu