தமிழகம் வருவதற்கு இ- பாஸ் கட்டாயம்

தமிழகம் வருவதற்கு இ- பாஸ் கட்டாயம்
X

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் இ பாஸ் பெற வேண்டும் என தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களை தவிரப் பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து தமிழகம் வருவோர் கட்டாயம் இ பாஸ் பெற்றிருக்க வேண்டும் எனத் தமிழக நலவாழ்வுத்துறை அறிவித்துள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருவோருக்கான வழிகாட்டுதல்களை நலவாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது.அதில் ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி தவிர பிற மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் இருந்து வருவோர் இணைய வழியில் விண்ணப்பித்து தமிழக அரசின் இ பாஸ் பெற்றிருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!