துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு

துப்பாக்கிகளை ஒப்படைக்க காவல்துறை உத்தரவு
X

சட்டமன்றத் தேர்தலையொட்டி, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போர் அதனைத் காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தேர்தல் விதிகள் அமலில் உள்ளது. இதில் உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போர் அதனை தங்கள் எல்லைக்குட்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைப்பது வழக்கம். அதன்படி தேர்தலையொட்டி, உரிமம் பெற்ற துப்பாக்கிகளை வைத்திருப்போர் அதனை சம்பந்தப்பட்ட காவல்நிலையங்களில் ஒப்படைக்க வேண்டுமென காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுவரை 600க்கும் மேற்பட்ட துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது. டிஜிபி மற்றும் சென்னை காவல் ஆணையர் அலுவலகங்களில் செயல்பட்டுவரும் தேர்தல் பிரிவு, சட்டமன்றத் தேர்தலையொட்டி கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!