அரசியல் கட்சிகளோடு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

அரசியல் கட்சிகளோடு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை
X

சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகளோடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்தவுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப் 6 ம் தேதி நடைபெற உள்ள நிலையில்,அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில், மதியம் 12:30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தில், அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.

Tags

Next Story
ai based agriculture in india