புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி: அமைச்சரவை ஒப்புதல்

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சி: அமைச்சரவை ஒப்புதல்
X

புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த, பிரதமர் மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

புதுச்சேரியில், எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமாவால் நாராயணசாமி ஆட்சி கவிழ்ந்தது. இதனையடுத்து, கடந்த 22 ம் தேதி சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், அரசு பெரும்பான்மை இழந்தது. தொடர்ந்து நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா செய்தது. இதனையடுத்து, புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, துணை நிலை கவர்னர் தமிழிசை , மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.இந்நிலையில், இன்று (பிப்.,24) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், புதுச்சேரியில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!