இலவச விபத்து காப்பீடு திட்டம்- அடையாள அட்டை வழங்கல்

இலவச விபத்து காப்பீடு திட்டம்- அடையாள அட்டை வழங்கல்
X

இடைக்கால பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கான இலவச விபத்துக் காப்பீடு திட்டத்துக்கான அடையாள அட்டையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கி, திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

2021-22-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீா்செல்வம் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தாா். அதில், தமிழகத்தில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ரூ. 55.67 லட்சம் தகுதியான குடும்பங்களுக்கு விபத்துக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசு தொடக்கியுள்ளது. இந்தத் திட்டத்துக்கான முழு நிதியையும் அரசே ஏற்றுக் கொள்ளும்.

இந்நிலையில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் அம்மா விரிவான விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்தை துவக்கி வைத்து, 9 நபர்களுக்கு விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டுத் திட்ட அடையாள அட்டைகளை தலைமைச் செயலகத்தில் இன்று முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி வழங்கினார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!