விரைவில் பொதுமக்களை சந்திப்பேன்- சசிகலா
விரைவில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திப்பேன் என சசிகலா தெரிவித்தார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை ஆனார். தொடர்ந்து தமிழகம் வந்த சசிகலா எந்த நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார்.இன்று ஜெயலலிதாவின் 73-வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய சசிகலா,
இன்னும் 100 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுக ஆட்சி இருக்கும் என்று ஜெயலலிதா சொல்லிவிட்டு சென்றார். அதை மனதில் வைத்து அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன். நானும் அதற்கு உறுதுணையாக நிற்பேன். விரைவில் தொண்டர்கள், பொதுமக்களை சந்திப்பேன் எனத் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu