ஜெயலலிதா பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை

ஜெயலலிதா பிறந்தநாள்: முதல்வர், துணை முதல்வர் மரியாதை
X

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின்பிறந்தநாளை முன்னிட்டு சென்னை அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது சிலைக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 73-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் பிறந்தநாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் ஜெயலலிதா உருவ சிலைக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர். கட்சிக் கொடியினை ஏற்றிவைத்து, இனிப்பு வழங்கினர்.இந்நிகழ்ச்சியில், அதிமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களும், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!