பிரதமர் மோடி நாளை கோவை, புதுச்சேரி வருகை

பிரதமர் மோடி நாளை கோவை, புதுச்சேரி வருகை
X

பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி நாளை கோயமுத்தூர் மற்றும் புதுச்சேரி வருகை தருகிறார்.

அரசு விழா மற்றும் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்க பிரதமர்மோடி நாளை கோயமுத்தூர் மற்றும் புதுச்சேரி வரவுள்ளார். காலை 10.20 மணிக்கு சென்னை வரும் பிரதமர், இங்கிருந்து புதுச்சேரி செல்கிறார். பல்வேறு திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, புதிதாக கட்டப்பட்டுள்ள பல்வேறு அரசுக் கட்டடங்களையும் மோடி திறந்து வைக்கிறார்.தொடர்ந்து பிற்பகலில் சென்னை திரும்பும் பிரதமர், இங்கிருந்து கோவை வருகிறார். கொடிசியா வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். மாலையில் அங்கு தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!