புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது

புதுச்சேரி காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது
X

புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது என்று அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று சிறப்புக் கூட்டம் காலை 10 மணிக்குக் கூடியது. அப்போது, நம்பிக்கை வாக்கு கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்து பேசினார். பின்னர் முதல்வர் நாராயணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் தோல்வியடைந்ததாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.நம்பிக்கை வாக்கெடுப்பு தோல்வியடைந்ததை அடுத்து, முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டதாக அவைத் தலைவர் சிவக்கொழுந்து அறிவித்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!