நிறைவடைந்த ரயில்வே பணிகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு

நிறைவடைந்த ரயில்வே பணிகள் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
X

தமிழகத்தில் முடிக்கப்பட்ட பல்வேறு ரயில்வே பணிகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தமிழகத்தில் ரயில்வே பணிகளை மின்மயமாக்கும் திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடந்துள்ளன. இதனடிப்படையில், அம்பத்தூர், அரக்கோணம், எலாவூர், மாம்பலம், மேட்டுப்பாளையம், திருப்பூர், கங்கைகொண்டான், கடையநல்லூர், நாகர்கோவில் டவுன், வாஞ்சிமணியாச்சி என, 10 ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக நடைமேம்பாலங்கள் திறக்கப்பட்டுள்ளன.இவற்றை காணொலிக் காட்சி மூலம் ரயில்வே துறை அமைச்சர் பியூஷ் கோயல் திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் ரயில்வே தடங்கள் முற்றிலும் மின்மயமாக்குவதற்கான பணிகள் துரிதகதியில் நடந்து வருவதாகவும் அடுத்த இரண்டரை ஆண்டுகளில் மொத்த கட்டமைப்பும் மின்மயமாக்கப்படும் என்றும் கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!