சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடும் சரிவு

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை கடும் சரிவு
X

சென்னையில் கடந்த 10 தினங்களுக்கு முன்னர் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 36,176 ரூபாய்க்கு விற்கபட்ட நிலையில், இன்று சவரன் தங்கம் 34,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. நேற்றைய தினம் சவரன் தங்கத்தின் விலை 35,080 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று 360 ரூபாய் குறைந்து 34,720 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் நேற்று 4,385 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று 4,340 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

24 கேரட் சுத்த தங்கத்தின் விலை நேற்று 38,152 ரூபாய்க்கு விற்கப்பட்ட நிலையில், 37,792 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் 72,300 ரூபாய்க்கும் ஒரு கிராம் வெள்ளி 72 ரூபாய் 30 காசுகளுக்கும் விற்கப்படுகிறது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி