லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
X

டீசல் விலை உயர்வைக் கண்டித்து வரும் 26ம் தேதி தமிழகம் முழுவதும் லாரிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தென்மண்டல லாரி உரிமையாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

டீசல் விலையை குறைக்க வேண்டும், மாநில அரசுகள் வாட் வரியை குறைக்க வேண்டும், பாஸ்டேக் முறையை ரத்து செய்து சுங்க சாவடிகளில் தனியாக பணம் செலுத்தும் ஒரு வழி முறை ஏற்படுத்தி தர வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 26ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாகவும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் மனு அளிக்க உள்ளதாகக் கூறினர்.தங்கள் கோரிக்கைகளை 15 நாட்களில் ஏற்காவிட்டால் அடுத்த மாதம் 15ம் தேதி தென் மாநில லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
ai in future agriculture