/* */

தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு

தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிப்பு
X

2019 - 2020-ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழகஅரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் , தமிழ் சினிமாவில் மகத்தான பங்களிப்பை அளித்த கலைஞர்களை அங்கீகரிக்கும் வகையில் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நடிகர் சிவகார்த்திகேயன், நடிகர் யோகிபாபு, ராமராஜன் ஆகியோருக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, செளகார் ஜானகி, நடிகைகள் சங்கீதா, ஐஸ்வர்யா, தேவதர்ஷினி,இசையமைப்பாளர்களில் டி.இமான், தீனா ஆகியோர் விருது பெறுகின்றனர்.

அது போல் இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், மனோஜ்குமார், ரவிமரியா ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடன இயக்குநர்கள் சிவசங்கர், ஸ்ரீதர், சண்டைப் பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம், தினேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்படுகிறது. மேலும் பாடலாசிரியர்கள் காமக்கோடியான், காதல் மதி, படத்தொகுப்பாளர் ஆண்டனி, மெல்லிசை கோமகனுக்கும், பின்னணிப் பாடகி சுஜாதா, பின்னணிப் பாடகர் அனந்து உள்ளிட்டோரும் விருது பெறுகின்றனர்.தயாரிப்பாளர்கள் ஐசரி கணேஷ், கலைப்புலி தாணு ஆகியோருக்கும் கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 20 Feb 2021 5:22 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  3. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  4. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...
  5. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் பிறந்ததே ஒரு சிறப்புதான்..! சிறப்பான வாழ்த்து..!
  6. கும்மிடிப்பூண்டி
    குப்பை கழிவுகள் சேகரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே யானை தந்தங்கள் திருடப்பட்ட வழக்கில் ஒருவர்
  8. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  9. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  10. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!