புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை-நாராயணசாமி

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை-நாராயணசாமி
X

புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் நமச்சிவாயம், தீப்பாய்ந்தான், மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று சபாநாயகர் சிவக்கொழுந்து வீட்டிற்கு சென்ற ஜான்குமார் ராஜினாமா கடிதம் அளித்தார். 4 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளதால் தற்போதைய நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.

இந்நிலையில் புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி கூறியதாவது, புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா செய்யப்படாது. சட்ட மன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம். இந்திய அரசியல் சாசன சட்டப்படி புதுச்சேரி அரசு செயல்படும் என்றார்.புதுச்சேரி அமைச்சரவை ராஜினாமா இல்லை

Tags

Next Story
வாடகை வீட்டை காலி செய்ய மறுத்ததால் மாநகராட்சி பில் கலெக்டர் மீீது புகார்!