கல்லணை கால்வாய் திட்டத்திற்கு நிதி- முதல்வர் கோரிக்கை

கல்லணை கால்வாய் திட்டத்திற்கு நிதி- முதல்வர் கோரிக்கை
X

கல்லணை கால்வாய் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அரசு டாங்கிகள், மெட்ரோ ரயில்களை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது, எனது அன்பு வேண்டுகோளை ஏற்று தமிழகம் வந்த மோடிக்கு நன்றி.கொரோனா தடுப்பூசியால் இந்தியாவிற்கு உலக அளவில் பாராட்டு கிடைக்கிறது.மெட்ரோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு போதுமான நிதி அளித்துள்ளது.சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை வண்டலூர் வரை நீட்டிப்பதற்கான ஆய்வு நடைபெறுகிறது.கல்லணை கால்வாய் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதி வழங்க வேண்டுகோள் விடுத்த முதல்வர்,கல்லணை கால்வாய் திட்டத்தால் தஞ்சை, புதுக்கோட்டையில் 67ஆயிரம் ஏக்கர் வேளாண் நிலங்கள் பலன் பெறும் என்றார்.

நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியதாவது,பாரத தேசத்தின் பாதுகாவலர், பாமரர்களின் சேவகராகவும்,தமிழகத்தின் நலன் நாடும் தன்னிகரில்லா தலைவராக பிரதமர் மோடி உள்ளார். அது போல் தமிழகத்தின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருபவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்ற அவர் மத்திய அரசுக்கும்,மாநில அரசுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்துவது மெட்ரோ ரயில் திட்டம் என்றார்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil