பிரதமர் மோடி வருகை- போக்குவரத்து மாற்றம்

பிரதமர் மோடி வருகை- போக்குவரத்து மாற்றம்
X

பிரதமர் மோடி நாளை சென்னை வருவதை முன்னிட்டு சென்னையில் போக்குவரத்து மாற்றபட்டுள்ளது.

இது குறித்து சென்னை பெருநகர போக்குவரத்து காவல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிரதமர் மோடி நாளை சென்னை வருவதையொட்டி நாளை காலை 8 மணிமுதல் மதியம் 1 மணி வரை போக்குவரத்து மாற்றியமைக்கப்பட உள்ளது. கனரக, சரக்கு வாகனங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் அனுமதி இல்லை.மேலும் கோயம்பேட்டில் இருந்து சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வரும் வாகனங்கள் நாயர் பாலத்தின் வழியாக பாந்தியன் ரவுண்டானா, சித்ரா பாயிண்ட் வழியாக அண்ணாசாலை சென்று தங்கள் இலக்கை அடையலாம்.

அண்ணாசாலையில் இருந்து ராயபுரம் நோக்கி வரும் வாகனங்கள் ஸ்பென்ஸர் பென்னி ரோடு, மார்ஸல் ரோடு, நாயம் பாலம், டவுட்டன் வழியாக தங்கள் இலக்கை சென்று அடையலாம்.அதுபோல் சவுத்கொனல் ரோட்டில் இருந்து காந்தி சாலை நோக்கி வாகனங்கள் கச்சேரி சாலை, லஸ் சந்திப்பு, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக சென்று தங்கள் இலக்கை சென்று அடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!