பிரதமர் மோடி வருகை -விமானநிலையத்தில் பாதுகாப்பு

பிரதமர் மோடி வருகை -விமானநிலையத்தில் பாதுகாப்பு
X

பிரதமா் நரேந்திர மோடி வருவதை முன்னிட்டு சென்னை பழைய விமானநிலையம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதோடு,டில்லியிலிருந்து வந்துள்ள சிறப்பு பாதுகாப்பு படை உயா் அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஆலோசனை கூட்டத்தை நடத்தினா்.

பிரதமா் மோடி தமிழகத்தில் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்க வரும் 14 ம் தேதி அன்று சென்னை வருகிறாா். காலை 11 மணிக்கு சென்னை ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடு சென்றடைகிறாா். அங்கிருந்து காரில் புறப்பட்டு,காலை 11.15 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டரங்கம் சென்றடைகிறாா்.அங்கு தமிழகத்திற்கான பல்வேறு திட்டப்பணிகளை முறைப்படி காணொளி காட்சிகள் மூலம் திறந்து வைக்கிறாா். பின்னர் பகல் 1.10 மணிக்கு தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு பகல் 1.30 மணிக்கு சென்னை பழைய விமானநிலையம் வந்து சோ்கிறாா்.இதையடுத்து பகல் 1.35 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்திலிருந்து இந்திய விமானப்படை தனி விமானத்தில் கேரளா மாநிலம் கொச்சி புறப்பட்டு செல்கிறாா்.

சென்னை பழைய விமான நிலையத்தில் இன்று காலையிலிருந்தே பாதுகாப்பு ஏற்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. பழைய விமான நிலையம் பகுதியில் உள்ள சரக்ககங்கள்,விமானநிறுவன அலுவலகங்கள், ஓடுபாதை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஊழியா்கள் அனைவரும் பலகட்ட சோதனைகளுக்கு பின்பே உள்ளே அனுமதிக்கப்படுகின்றனா்.முறையான அனுமதி அட்டைகள் இல்லாதவா்கள் விமானநிலைய வளாகத்திற்குள் வருவதற்கு அனுமதியில்லை.

இதற்கிடையே பிரதமரின் பாதுகாப்பிற்காக சிறப்பு பாதுகாப்பு படை எஸ்பிஜி ஐஜி தலைமையில் சுமாா் 25 போ் டில்லியிலிருந்து விமானத்தில் சென்னை வந்தனா்.அவா்கள் சென்னை பழைய விமானநிலையம் பகுதி முழுவதையும் ஆய்வு செய்தனா். மேலும் பாதுகாப்பு பணி குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!