வாரத்தில் மூன்று முறை "திருநெல்வேலி – தாதர்" சிறப்பு ரயில்
கோயம்புத்தூர், மங்களூர், வழியாக திருநெல்வேலியிலிருந்து மும்பை வரை ஏற்கனவே ஒரு வாராந்திர சிறப்பு ரயில் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போது கூடுதலாக சேலம், தர்மபுரி, ஹீப்ளி வழியாக மற்றும் ஒரு வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயிலை திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு (தாதர்) இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
வண்டி எண் 01021 தாதர் - திருநெல்வேலி வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் 27.02.2021 முதல் சனிக் கிழமைகள், செவ்வாய் கிழமைகள் மற்றும் புதன் கிழமைகளில் இரவு 09.30 மணிக்கு புறப்பட்டு திங்கள் கிழமைகள், வியாழக்கிழமைகள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் காலை 11.40 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறுமார்க்கத்தில் வண்டி எண் 01022 திருநெல்வேலி - தாதர் வாரம் மும்முறை சேவை சிறப்பு ரயில் 01.3.2021 முதல் திங்கட்கிழமைகள், வியாழக்கிழமைகள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மாலை 03.00 மணிக்கு புறப்பட்டு புதன் கிழமைகள், சனிக்கிழமைகள் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு தாதர் சென்று சேரும்.
இந்த ரயில்கள் கல்யாண், புனே, சதாரா, கர்ட், சங்கிலி, குடாட்சி, கட்பிரபா, பெல்காம், லோன்டா, ஆழ்னவார், தார்வார், ஹீப்ளி, ஹவேரி, ராணிபென்னூர், ஹரிஹர், தேவாங்கிர், பிரூர், கடூர், அரிசிகரே, திப்டூர், தும்குர், யெஸ்வந்த்பூர், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்குப் படுக்கை வசதி பெட்டி, மூன்று குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், எட்டு இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், மூன்று இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், இரண்டு காப்பாளர் அறையுடன் கூடிய சரக்கு பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்கள் மறு அறிவிப்பு வரும் வரை இயக்கப்படும். இந்த ரயில்களில் பயணம் செய்ய முன்பதிவு அவசியம்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu