இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வந்தார்

இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வந்தார்
X

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுடன் 8 அதிகாரிகள் இன்று தமிழகம் வந்தனர். தற்போது அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையக் குழு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவை தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.மேலும் அரசு சார்பில் வெளியிடப்படும் விளம்பரங்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தேர்தல் ஆணையம் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பாக ஆர்.எஸ்.பாரதி கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story
ai tools for education