அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை: காவல்துறை

அமைதிக்கு குந்தகம் விளைவித்தால் நடவடிக்கை: காவல்துறை
X

பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் கட்சிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குறிப்பிட்ட சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அரசியல் நோக்கங்களுக்காக பிற அமைப்பினரை போன்று தங்களை பாவித்துக் கொள்வதாக காவல்துறை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் பெருந்திரளாகக் கூடி சட்டத்தை கையிலெடுத்து போக்குவரத்தையும், பொது அமைதியையும் பாதிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் சட்டம் ஒழுங்கு பிரச்னைகளை ஏற்படுத்தும் என்பதால் யாரும் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!