நான் அறிவித்த திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி செய்கிறார் : மு.க.ஸ்டாலின்

நான் அறிவித்த திட்டத்தை முதல்வர் பழனிச்சாமி செய்கிறார் : மு.க.ஸ்டாலின்
X
யார் ஆளும் கட்சி? யார் எதிர்கட்சி என தெரியவில்லை? நாம் சொல்வதை அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று நாகர்கோவிலில் மு.க.ஸ்டாலின் பேச்சு.

விடியலை நோக்கி ஸ்டாலின் பயணம் என்ற தலைப்பில் தமிழகம் முழுவதும் பயணம் செய்யும் ஸ்டாலின் நாகர்கோவிலில், கடந்த ஜனவரி மாதம் 13ம் தேதி நான் அறிவித்த திட்டத்தை நேற்று முதல்வர் பழனிச்சாமி அறிவுறுத்தியுள்ளார். சாகின்ற நேரத்தில் சங்கரா சங்கரா என்று சொன்னது போல் புதிது புதிதாக அறிவித்து வருகின்றனர் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது,

யார் ஆளும் கட்சி? யார் எதிர்கட்சி என தெரியவில்லை? நாம் சொல்வதை அவர் செய்து கொண்டிருக்கிறார், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை அடகு வைத்திருந்தால் ரத்து செய்யப்படும் என நான் அறிவித்திருந்தேன் அடுத்து 2நாட்களில் அந்த அறிவிப்பை முதல்வர் அறிவிப்பார்.. தேர்தல் நெருங்கும் காரணத்தினால் அறிவித்து வருகிறார்.. இதையெல்லாம் மக்கள் நம்பமாட்டார்கள், ஒட்டு மொத்த தமிழக மக்களும் அதிமுக அரசுக்கு மரண அடி கொடுக்க போகின்றனர் என நாகர்கோவிலில் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags

Next Story
ai in future agriculture