சசிகலா வருகை அலைகடலென வரவேற்பு : டிடிவி தினகரன் பேட்டி

சசிகலா வருகை அலைகடலென வரவேற்பு :   டிடிவி தினகரன் பேட்டி
X
வரும் 7ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார், அவருக்கு தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை அலைகடலென வரவேற்பு அளிக்க உள்ளதாக டிடிவி தினகரன் பேட்டி

தமிழக வரும் சசிகலாவிற்கு, தமிழக எல்லையிலிருந்து சென்னை வரை அலைகடலென திரண்டு வரவேற்பு அளிக்க உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது கேள்விக்கு பதிலளித்து அவர் கூறியதாவது,

ஒரு வார ஓய்வுக்கு பிறகு சசிகலா தமிழகம் வருவார். யார் தவறு செய்தவர்கள் யார் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்கெல்லாம் கே.பி.முனுசாமி சொல்லி பதில் சொல்ல விரும்பவில்லை. சசிகலாவின் வருகை தமிழகத்தில் சிலருக்கு கெமிக்கல் ரியாக்சனை உருவாக்கி உள்ளது. திமுக ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவே அமமுக தொடங்கப்பட்டது. அதிமுகவை மீட்டெடுக்கவே அமமுகவை தொடங்கினோம். அதிமுக சட்டம் பொதுச்செயலாளர் மறைந்தாலோ அல்லது செயல்படாத நிலையிலோ பொதுக்குழுவை கூட்ட முடியும். பொதுச்செயலாளர் மட்டுமே பொதுக்குழு தேர்தலை நடத்த முடியும். பதவி வழங்கவும், நீக்கவும்கூடியவர் பொதுச்செயலாளர். பொதுச்செயலார் இல்லாத நிலையில் துணை பொதுச்செயலாளர் செய்ய வேண்டும். நீதிமன்றம் முடிவு செய்யும் வரை பொறுத்திருப்போம்.

நான்கு பேர் ஐந்கு பேர் பத்து பேர் கூடி அவர்களே பதவியை நீக்குவது வேடிக்கையாக உள்ளது. சனநாயக போராட்டம் சசிகலா தொடங்குவார், அதிமுக மீட்கும் போராட்டத்தை அமமுக செய்யும். திமுகவை ஆட்சிக்கு வரக்கூடாது என்கிற பரந்த மனப்பான்மை எங்களுக்கு உள்ளது. குறுகிய மனப்பான்மை இல்லை. தேர்தலுக்கு அமமுக தயராகி உள்ளது. யார் என்ன என்ன பேசினார்கள் என்ன என்பதை சிரித்துக்கொண்டே பார்த்தோம். அவர்கள் அன்று என்ன பேசினார்கள் இன்று என்ன பேசினார்கள் என தெரியும். குட்டையை குழப்பி அம்மாவின் உண்மையான தொண்டகளை குழப்ப உள்ளனர். எனக்கும் அவருக்கும் தகராறு எனக்கூறி அவர்கள் சந்தோஷப்படட்டும்.

சசிகலாவுடன் தொலைபேசியில் தான் பேசுகிறோம். ஜெ.எம்ஜிஆர் நினைவிடம் போகலாம் என சசிகலா கூறினார். இவர்கள் தீடீரென தடை போட்டுள்ளனர். மக்கள் பார்த்துக்கொண்டுள்ளனர். தினகரனை யாரும் தனிமைப்டுத்தவில்லை. கொரானா கூட என்னை தனிமைப்படுத்த வில்லை. எங்களை குழப்ப நினைத்தவர்கள் அவர்கள் தான் குழம்பி போய் உள்ளனர்.

அமமுக தொடங்கப்பட்டதே அதிமுகவை மீட்டெடுக்க தான்.பாஜக சசிகலாவை ஏற்றுக்கொள்ளுமா என்பதை பாஜகவிடம் தான் நீங்கள் தான் கேட்க வேண்டும். ஸ்லீப்பர் செல் அவர்கள் பணியை சரியாக செய்வார்கள். போஸ்டர் அடித்தவர்களை நீக்குவதும், சசிகலாவுக்கு வாழ்த்து தெரிவித்த துணை முதல்வர் மகன் குறித்த என்ன நினைக்கிறீர்கள் கேள்விக்கு,? நடப்பதெல்லாம் பார்த்து சிரித்துக்கொண்டுள்ளேன். தலைகீழாக நின்றாலும் திமுக ஆட்சிக்கு வர முடியாது. திமுக என்கிற தீய சக்கியை ஆட்சிக்கு வருவதை அதிமுக தொண்டர்கள் அனுமதிக்க மாட்டோம்.

ஜெ உண்மையான தொண்டர்கள் ஜெ வின் ஆட்சியை கட்டாயம் அமைப்பார்கள் அதற்கு சசிகலாவின் பங்கு இருக்கும். நலமாக உள்ளேன் என அவரே தெரிவித்துள்ளார்.

இன்றைய நிலைமையில் அவர் போட்டியிட முடியாது. சட்ட வல்லனநர்களை கலந்து பேசி வருகிறேன்.

ஒற்றுமை நிலவினால் தினகரன் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்படுவாரா?

ஒற்றுமை வரட்டும். பிறகு அதை பற்றி பேசலாம். சிவி.சண்முகம் பேட்டியின் போது நிதானமாக இருந்தாரா அதை கேளுங்கள் முதலில் என்று தினகரன் பதிலளித்து பேசினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!