திருநெல்வேலி - காந்திதாம் சிறப்பு ரயில்
திருநெல்வேலியிலிருந்து குஜராத் மாநில அகமதாபாத் அருகே உள்ள காந்திதாம் வரை சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வண்டி எண் 09423 திருநெல்வேலி - காந்திதாம் அதிவிரைவு சிறப்பு ரயில் திருநெல்வேலியிலிருந்து பிப்ரவரி 4, 11, 18, 25 மார்ச் 4, 11, 18, 25 ஏப்ரல் 1, 8, 15, 22, 29 ஆகிய வியாழக்கிழமைகளில் காலை 07:30 மணிக்கு புறப்பட்டு சனிக்கிழமைகளில் பிற்பகல் 02.35 மணிக்கு காந்திதாம் சென்று சேரும்.
வண்டி எண் 09424 காந்திதாம் திருநெல்வேலி அதிவிரைவு சிறப்பு ரயில் காலையிலிருந்து பிப்ரவரி 8, 15, 22 மார்ச் 1, 8, 15, 22, 29 ஏப்ரல் 5, 12, 19, 26 ஆகிய திங்கட் கிழமைகளில் அதிகாலை 04.40 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் இரவு 11.35 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.
இந்த ரயில்கள் நாகர்கோவில் டவுன், திருவனந்தபுரம், காயங்குளம், எர்ணாகுளம், திருச்சூர், ஷோரனூர், கோழிக்கோடு, மங்களூர், கார்வார், ரத்தினகிரி, பன்வல், வாசனை ரோடு, சூரத், வடோதரா, அகமதாபாத் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 12 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், இரண்டு சரக்கு மற்றும் காப்பாளர் பெட்டிகள் இணைக்கப்படும்.
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu