ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு

ஆளுநர் உரையை புறக்கணித்து திமுக வெளிநடப்பு
X

சட்டமன்றத்தில் தமிழக ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்எல்ஏ.,கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த ஆண்டின் முதல் தமிழக சட்டப்மன்ற கூட்டத்தொடர் கலைவாணா் அரங்கில் இன்று காலை ஆளுநர் உரையுடன் தொடங்கியது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றி வருகிறார். ஆளுநர் உரையை தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்புத் தருமாறு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எதிர்க்கட்சிகளை வலியுறுத்தினார். இதையடுத்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!