மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவு தினம்

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நினைவு தினம்
X
ஒரு தனி மனிதன் ஒரு பல்கலைக்கழகமாகத் திகழ முடியும் என்பதை 19 ஆம் நூற்றாண்டில் நிறுவிக்காட்டிய பெருந்தமிழ் அறிஞர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை.

'பிற்காலக் கம்பர்' என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுவர். படித்தல், பாடம் சொல்லுதல், நூல்கள் யாத்தல் என்பனவற்றையே வாழ்வாகக் கொண்டிருந்த இவர் இயற்றிய தல புராணங்கள் பல.

19-ஆம் நூற்றாண்டு வரை தலபுராணம் பாடப்பெறாத சிவதலத்தில் வாழ்ந்திருந்த சைவ அன்பர்களும், பெருஞ்செல்வர்களும் இவரைத் தம் ஊருக்கு அழைத்துச்சென்று, பெருஞ்சிறப்புகள் செய்து தம் ஊருக்குத் தலபுராணங்கள் ஆக்கித் தருமாறு வேண்டிப் பெற்றனர்.

தமிழ் மொழியில் இவரே அதிக எண்ணிக்கையிலான தல புராணங்களைப் பாடியவர். நூற்றுக்கும் மேற்பட்ட சிற்றிலக்கியங்களும் இவரால் பாடப் பெற்றுள்ளன. இவர் பாடிய திருநாகைக் காரோணப் புராணமும், மாயூரப் புராணமும் பெருங்காப்பியங்களாகப் போற்றப்படும் சிறப்பு மிக்கன.

-மைக்கேல்ராஜ்

Next Story
ai in future agriculture