இல்லம் தோறும் போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை செயலாளர்

இல்லம் தோறும் போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை செயலாளர்
X
விடுபட்ட குழந்தைகளுக்கு இல்லம் தோறும் சென்று, ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், செவிலியர்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து போடப்படும் - சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் பேட்டி.

அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் 5 வயது குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து போடப்படுகிறது, இதனை சுகாதார துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் துவக்கி வைத்தார். மருத்துவமனை முதல்வர் பாலாஜி மருத்துவ அலுவலர் ரமேஷ் மாநகராட்சி சுகாதார அதிகாரி ஜெகதீசன்,குழந்தைகள் நல துறை பேராசிரியர் கணேசன், மருத்துவர்கள் செந்தில்,அரவிந்த் தலைமையில் மருத்துவர்கள் ,அலுவலர் ஆலோசனை மேற்கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன்,

தமிழகத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு அங்கன்வாடி மையங்கள் சத்துணவு மையங்கள் பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 56 மையங்களில் போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வடசென்னையை சேர்ந்த பொது மக்கள் பணிகளை விட்டு செல்லக் முடியாமல் இருக்கக்கூடிய நிலையில் மொபைல் முகாம்கள் அதிகப்படுத்த பட்டுள்ளதாகவும் சென்னையில் 6.85 லட்சம் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், 1,652 ட்ரான்சிட் கேம்ப் பேருந்து நிலையங்கள் மற்றும் ஆயிரம் மொபைல் முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடிகளில் மையங்கள் அமைக்கப்பட்டு பேருந்து நிலையங்கள் இந்த மையங்கள் மூலம் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து அளிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது ஒரு லட்சத்து 83 ஆயிரம் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டு உள்ளதாகவும் 2508 வாகனங்கள் பணியில் உள்ளதாக தெரிவித்தார் 95% இலக்கு நிச்சயம் செலுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் மருத்துவமனையில் போற அச்சப்பட்டு உள்ள நிலையில் அதற்கு ஏற்றவாறு சிகிச்சை இல்லாத மருத்துவமனைகள் பொது இடங்கள் என அவர்களுக்கு தேவையான இடங்களில் வீடுகளுக்கு அருகாமையில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டு முகாம்கள் அமைத்துள்ளதாகவும் அதை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். விடுபட்ட குழந்தைகளுக்கு இல்லம் தோறும் சென்று, ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், செவிலியர்கள் மூலம் போலியோ சொட்டு மருந்து போடப்படும் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Next Story