சசிகலா காரில் அதிமுக கொடி பறந்தது

சசிகலா காரில் அதிமுக கொடி பறந்தது
X
சசிகலா டிஸ்சார்ஜாக செய்யப்பட்ட நிலையில் அவரது அரசியல் நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில் அதிமுக கட்சிக்கொடி அவரது காரில் பறந்தது.

சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகலா சிறை தண்டனை முடிந்து விடுதலையாகும் சமயத்தில், கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இன்று அவர் பூரண குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.அவரை வரவேற்க எராளமான தொண்டர்கள் மருத்துவமனை முன்பு குவிந்து வந்தனர்..


இந்நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் ஆனா சசிகலா மருத்துவமனையில் இருந்து கிளம்பும் போது அதிமுக கட்சிக்கொடி அவரது காரில் பறந்தது. இது அவரது அரசியல் நிலைப்பாட்டை நன்கு தெரிவிப்பதாக இருந்தது. சிறைச்சாலைக்கு செல்லும் முன்பாக சசிகலா ஜெயலலிதா சமாதியில் சத்தியம் செய்து விட்டு கிளம்பியது நினைவு கூற தக்கது, தற்போது அதிமுக கொடியுடன் கிளம்பி இருக்கும் சசிகலா தர்மயுத்தத்தை தொடங்குவார் என கூறுகிறார்கள்.

Next Story