போலியோ சொட்டு மருந்து கட்டாயம் கொடுக்க வேண்டும்: விஜயபாஸ்கர்
நாடு முழுவதும் இன்று ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப் பட்டு வருகிறது, தமிழகத்தில் சென்னையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சொட்டு மருந்து வழங்கும் முகாமை தொடங்கி வைத்தார்.
அதேபோன்று புதுக்கோட்டையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர். மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில்போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் முகாமை தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு அவரே சொட்டு மருந்து வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர்,
தமிழகம் முழுவதும் 43 ஆயிரத்து 51 மையங்களில் இன்று சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் 70 லட்சத்து 20 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கொரோனா காலகட்டமாக இருந்தாலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கட்டாயம் சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். 17 ஆண்டுகளாக தமிழகம் போலியோ இல்லாத மாநிலமாக இருந்து வருகிறது அதை தக்க வைப்பதற்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்,
கொரோனா காலகட்டமாக இருப்பதால் பொது மக்களுக்கு எந்தவிதமான தயக்கமும் வேண்டாம் பயமும் வேண்டாம். கட்டாயம் போலியோ சொட்டு மருந்து போட்டுக் கொள்ள வேண்டும். இன்று நடைபெறும் முகாமில் சொட்டு மருந்து போட்டுக் கொள்ளாத விடுபட்ட குழந்தைகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் வீடு வீடாகச் சென்று சொட்டு மருந்து வழங்கப்படும் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu