போலியோ சொட்டு மருந்து முகாம்- முதல்வர் துவக்கி வைப்பு

போலியோ சொட்டு மருந்து முகாம்- முதல்வர் துவக்கி வைப்பு
X

தமிழகம் முழுவதும் 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

தமிழகம் முழுவதும் மருத்துவமனை, சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் 70.26 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணி வரை போலியோ சொட்டு மருந்து போடப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.தொடர்ந்து சொட்டு மருந்து போட்டுக்கொண்ட குழந்தைகளுக்கு இனிப்பு, பந்து, பொம்மைகளை வழங்கினார். தமிழகம் முழுவதும் 43,051 மையங்களில் போலியோ மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!