மாற்று கட்சியில் இணையும் ரஜினி ரசிகர்கள்: குருமூர்த்தி விமர்சனம்

மாற்று கட்சியில் இணையும் ரஜினி ரசிகர்கள்: குருமூர்த்தி விமர்சனம்
X
ரஜினி கட்சி தொடங்காததால் அவரது ரசிகர்கள் அதிமுக, திமுகவில் சேர்ந்து வரும் நிலையில் அவர்களை பற்றி விமர்சனம் செய்து துக்ளக் பத்திரிகையில் ஆசிரியர் குருமூர்த்தி கட்டுரை வெளியிட்டுள்ளார்.

துக்ளக் பத்திரிகையில் ஆசிரியர் குருமூர்த்தி வெளியிட்டுள்ள கட்டுரையில், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரமாட்டேன் என்று அறிவித்ததுமே இதுதாண்டா சமயம் என்று அவரது ரசிகர் மன்றத்தினர் படை படையாக திமுகவிலும் அதிமுகவிலும் சேர்ந்து வருகிறார்கள்.

எந்த ஊழலை ஒழிக்க வேண்டுமென்று ரஜினி நினைத்தாரோ, அந்த ஊழலின் பிறப்பிடமான திமுகவில் ரசிக சிகாமணிகள் சேர்ந்தது சிலருக்கு வேண்டுமானால் ஆச்சரியமாக இருக்கலாம், ஆனால், இதில் ஆச்சரியபடுவதற்கு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

ரஜினிகாந்த் வேண்டுமானால் தேசியவாதியாக, ஆன்மீகவாதியாக, நேர்மையாளராக இருக்கலாம். ஆனால் அவருடைய ரசிகர்கள் காமராஜர், கக்கன் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரர்கள் அல்ல.

தலைவா தலைமையேற்க வா என்று ஊர் ஊருக்கு போஸ்டர் அடித்து ஒட்டியதால் தியாகத்தின் திரு உருவங்கள் அல்ல. ஆதாயத்தை எதிர்பார்க்காமலா இதையெல்லாம் செய்திருப்பார்கள். நல்ல வேளையாக ரஜினிகாந்த் தப்பித்தார்.

எல்லா கட்சிக்காரர்களையும் போலத்தான் ரஜினி ரசிகர்களுக்கும் அரசியல் என்பது பணம் பண்ணுகிற வழி. அதனால்தான் இவ்வளவு அவசர அவசரமாக கட்சிகளில் இணைந்து கொண்டிருக்கிறார்கள் என விமர்சனம் செய்து எழுதியுள்ளார். இந்த கட்டுரை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-மைக்கேல்ராஜ்

Tags

Next Story