மகாத்மா காந்தி நினைவுநாள்: தலைவர்கள் மரியாதை

மகாத்மா காந்தி நினைவுநாள்: தலைவர்கள் மரியாதை
X

மகாத்மா காந்தி நினைவுநாளை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

மகாத்மா காந்தியின் நினைவு நாள் இன்று நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு புது டெல்லி, ராஜ்காட்டில் உள்ள காந்தியின் நினைவிடத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தினார்கள்.

தமிழகத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மரியாதை செலுத்தினர்.அது போல் டெல்லி முதல்வர் அரவிந்த்கெஜ்ரிவால், மேற்குவங்க முதல்வர் மம்தாபானர்ஜி ஆகியோரும் அவரவர் மாநிலங்களில் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!