அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசுக்கு தடை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசுக்கு தடை
X

கடந்த 16-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை யொட்டி மதுரை அலங்காநல்லூரில் உலக புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் 12 காளைகளை அடக்கிய கண்ணன் என்பவருக்கு முதல் பரிசு அறிவிக்கப்படிருந்தது. 9 காளைகளை அடக்கிய கருப்பண்ணனுக்கு இரண்டாம் பரிசு அறிவிக்கப்படிருந்தது. இரண்டாம் பரிசை வாங்க மறுத்த கருப்பண்ணன், ஆள்மாறாட்டம் செய்து கண்ணன் அலங்காநல்லூரில் முதல் பரிசை வென்றதாக புகார் கூறி, வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (29/01/2021) விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதிகள், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் முதலிடம் பிடித்த கண்ணனனுக்கு பரிசு வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கு பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர், வாடிப்பட்டி வட்டாட்சியர், மாடுபிடி வீரர்கள் கண்ணன், ஹரி கிருஷ்ணன் பதில் தர உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை பிப்ரவரி 5- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags

Next Story