தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்
X

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முன்பு வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பல மாவட்டங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. பல பகுதிகளில் மழைநீரை அகற்ற கோரி பொதுமக்கள் போராட்டமும் செய்தனர். அப்போது பெய்த மழைநீரே முழுமையாக இன்னும் வடியாத நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், கிழக்கு திசை காற்றலைகளின் காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு தென் தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி