வேதா நினைவு இல்லம்: முதல்வர் திறந்து வைத்தார்

வேதா நினைவு இல்லம்: முதல்வர் திறந்து வைத்தார்
X

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதா வாழ்ந்த வேதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

சென்னை போயஸ்கார்டனில் உள்ள அரசுடைமையாக்கப்பட்ட வேதா நினைவு இல்லத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். வேதா இல்லத்தின் பெயர் பலகையையும், நினைவு இல்ல கல்வெட்டினையும் முதல்வர், மக்கள் பார்வைக்காக திறந்து வைத்து, ரிப்பன் வெட்டி நினைவு இல்லத்தினுள் சென்றார். மேலும் வரவேற்பறையில் குத்து விளக்கு ஏற்றினார். அதனைத்தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் குத்துவிளக்கு ஏற்றி நினைவு இல்லத்தை பார்வையிட்டனர்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!