செல்லூலாயிட் இளவரசி ஸ்ருதிஹாசன் பிறந்தநாள்
கமல் மகள் ஸ்ருதி..அப்பாவை போலவே அதிரடி ஸ்டேன்மெண்டுகளுக்குச் சொந்தக்காரி..
தன் சினிமா வாழ்க்கைக் குறித்து அவர் கூறியது, "11 வருசங்களா சினிமாவில் இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எனக்கு நடிப்பில் விருப்பமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து நடிப்பேன். எனது பெற்றோர்கள் சினிமாவில் இருந்ததால் எளிதா திரைதுறையில் நுழைய முடிந்தது. ஹாசன் என்று குடும்ப பெயர் அதற்கு ரொம்ப உதவியா இருந்துச்சு. ஆனாலும் அந்த பெயரிலேயே சினிமாவில் நிலைப்பது கஷ்டம். ஜஸ்ட் ஸ்ருதியாக சினிமாவில் நிலைக்க ஆசைப்படுகிறேன். ரசிகர்கள் மத்தியில் இன்னும் பெயர் புகழ் சம்பாதிக்க வேண்டும். அதற்காக உழைக்கிறேன்" என்றார்.
இதே ஸ்ருதி தமிழ் மட்டுமின்றி தெலுங்கு உள்ளிட்ட பிறமொழி படங்களிலும் பிஸியாக நடித்து கொண்டே, பிரிட்டிஷ் நடிகர் மைக்கேல் கோர்சல் என்பவருடன் நட்பாக பழகி அதை பிரேக் செய்ததை ஓபனாக அறிவித்தார்.
கூடவே லிவ் டு கெதர் குறித்தும், கல்யாணமாகம் குழந்தை பெற்றுக் கொள்வது குறித்தும், போதைக்கு அடிமையானது குறித்தும் கூட வெளிப்படையா பேசியவர் இந்த மிஸ் ஹாசன்..இது பத்திக் கேட்டப் போது, 'நான் பிரண்ட்லியா பேசிய விசயங்களை வச்சி சோஷியல் மீடியாக்களில் என்னை கிண்டல் செய்வது, விமர்சிப்பது எல்லாம் என்னை இப்போ பாதிப்பது இல்லை. ஆரம்பத்தில் அது நம் கவனத்துக்கு வந்த போது கஷ்டமாகத்தான் இருந்துச்சு. அதன் பிறகு அது பெரிதாக தெரியவில்லை.
ஆனா சமீபத்தில் யாரும் என்னை கிண்டல் செய்யவில்லை. ஆனால் பலர் ஸ்ருதிக்கு சீக்கிரம் திருமணம், அவர் குண்டாகிவிட்டார் என்று தெரிவித்துள்ளனர். அப்பொழுது எனக்கு வருத்தமாக இருந்தது. எனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது என்பது எனக்கு தெரியும். கடந்த 10 ஆண்டுகளில் நான் எனக்காக நேரம் ஒதுக்கவில்லை, என்னை கவனித்துக் கொள்ளவில்லை. எனக்கு அன்பு, அமைதி தேவைப்பட்டது. அதுனாலே முகம் தெரியாதவர் விமர்சனங்கள் என்னை பாதிப்பது இல்லை. ஏனென்றால் அனைவருக்கும் அவரவர் வாழ்க்கை மிகவும் முக்கியம் என்பதை புரிந்து கொண்டுள்ளேன்.
இன்னொரு விஷயம் தெரியுமா?, பிறந்ததில் இருந்தே என்னையும், அக்ஷரா ஹாசனையும் அப்பா என்ற முறையில் கமல் கொஞ்சியதே கிடையாது. அந்த ஏக்கம் எங்கள் இருவருக்கும் இன்னிக்கும் உண்டு. ஆனால் அவர் மகள் மீது பாசமாக நடித்த படங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆனாலும் அவர் அனைத்து விஷயங்களிலும் என்னுடைய கருத்தையும் கேட்பார்.
முன்னாடி என்னுடைய அப்பாவும், அம்மாவும் சண்டை வந்து பிரிந்தனர். அது எனக்கு வருத்தமாக இருந்தது. ஆனால் தினமும் சண்டையிட்டு வீடு கலவரமாக இருப்பது எனக்கு பிடிக்கவில்லை. சண்டை போடுவதை விட தனித்தனியாக பிரிந்து வாழ்வதில் தவறில்லை என முடிவு செய்தேன். அதனால் இருவருக்கும் சமாதானம் செய்யலாம் என்ற எனது எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். எப்படியோ இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள். பிரிவும் கூட சில நேரங்களில் மகிழ்ச்சியாக தான் இருக்கும்" அப்படீன்னு சொல்லி கண்ணில் பொங்கிய நீரை அழுத்தி உள்ளே அனுப்பி விட்டு சிரித்த சிரிப்பில் வலி தெரிந்தது..
இந்த செல்லூலாயிட் இளவரசிக்கு விரும்பிய வாழ்க்கைக் கிடைக்க பிறந்தநாள் வாழ்த்துக்களை ரசிகர்களும், சினிமா அப்டேட் குழுவினரும் தெரிவித்துக் கொண்டனர்.
- மைக்கேல்ராஜ்
Tags
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu