நாளை மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்

நாளை மாலை தமிழக அமைச்சரவை கூட்டம்
X

தமிழக அமைச்சரவைக்கூட்டம் நாளை மாலை நடைபெற உள்ளது.

தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை (29 ம் தேதி) மாலை 4.30 மணி அளவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் விவாதிக்க இருக்கும் அம்சங்கள் குறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக சட்டமன்றத்தேர்தல் நடைபெறுவதற்கு முன்பாக தமிழக அரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்ய வேண்டும். அதுகுறித்த அம்சங்கள் குறித்தும் அமைச்சரவைக்கூட்டத்தில் விவாதிக்க வாய்ப்பிருக்கிறது.

மேலும் வேளாண் சட்டங்கள் குறித்தும், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஆளுநரிடம் அளித்த அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியல் குறித்தும் கேள்வி எழுந்தால் எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் இந்த அமைச்சரவைக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் எனவும் தெரிகிறது.

Tags

Next Story
ai in future agriculture