ஜெயலலிதா நினைவிடம் திறந்து வைப்பு

ஜெயலலிதா நினைவிடம் திறந்து வைப்பு
X

முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவிடம், 50,422 சதுர அடி பரப்பளவில் ரூ. 80 கோடி செலவில் நினைவிடத்துக்கான பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வந்த நிலையில், பணிகள் நிறைவடைந்து இன்று நினைவிடம் திறக்கப்பட்டது. எம்ஜிஆா் நினைவிடத்தில் மலா்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது. அதையடுத்து, ஜெயலலிதா நினைவிடத்துக்கான கல்வெட்டினை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார். பின்னர் ஜெயலலிதாவின் நினைவிடத்தை திறந்து வைத்தார். அப்போது துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் உள்ளிட்ட அதிமுகவினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!